அம்மாக்கள் நாள்

உலகிலே மிகவும் பாதுகாப்பானதும் வசதியானதுமான இடம் தாயின் அந்த இருண்ட கருவறைதான் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து ஏதுமில்லை. எதற்குமே ஒப்பிடமுடியாத தாயின் கருவறையில் அந்த பத்து மாதங்களும் எவ்வளவு சுகமாக பாதுகாப்பாக தூங்கியிருப்பேன் அந்த சுகம் மீண்டும் வராதா என்று ஏங்கித்தவிக்கும் நாட்கள்தான் எத்தனை. சிறுவயது முதல் எவ்வளவு துன்பங்களை கொடுத்துக்கொண்டிருக்கின்றோம் ஆனால் இன்றுவரை எமக்காக தன்னையே உருக்கி விரதம் இருக்கும் அந்த அன்னையின் அன்பிற்கு இந்த உலகில் எந்த உறவு ஈடாகமுடியும். எவ்வளவு பொறுமை எவ்வளவு அடக்கம் எவ்வளவு அன்பு எதையும் தாங்கும் மனப்பாண்மை இவ்வாறு எழுத்தில் அடக்கமுடியாத எண்ணற்ற அன்புடையது அந்த தாயுள்ளம். இன்று அந்த அன்னைக்கு ஓர் அன்புத்தினம் பெறுதற்கரிய அந்த உறவை நேரடியாகவாழ்த்த முடியாத துர்ப்பக்கியசாலிகளுள் நானும் ஒருவன். அன்பென்றாலே அதன் மறுவடிவம் நீங்கள்தான் அம்மா........



கிரேக்கத்தில் முன்னோர்கள் தங்கள் தாய் கடவுளை வணங்கி விழா எடுத்தார்கள் இந்த விழா காலப்போக்கில் ரோமிற்கு பரவியது ரோமானியர்கள் தங்களுடைய தாய் கடவுளுக்கு ஒவ்வொரு வருடமும் மார்ச்15 தொடக்கம் மார்ச்18 வரை மூன்று நாட்கள் விழா எடுத்துக்கொண்டாடினார்கள் ஆனாலும் ரோமானியர்கள் அந்த நாட்களில் மற்றோனலியா (Matronalia) எனும் விழாவினை தங்களுடைய ஆதிக்கடவுளான ஜுனோ (Juno) எனும் கடவுளுக்காகவும் கொண்டாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது அவர்கள் அந்த நாட்களில் இந்த தினங்களில் தங்களுடைய அன்னையருக்கு பரிசு கொடுத்து மதிப்பளித்தார்கள் இதுவே பின்னர் நவீன அன்னையர் தினத்திற்கு வழிவகுத்தது.

உலகில் அன்னை இல்லாத குடும்பமே இல்லை அந்த தாயை இதயங்களில் இருத்தி மரியாதை செய்து வாழ்த்தும் நவீன அன்னையர் தினம் 1912ம் ஆண்டளவில் அன்ன ஜார்விஸ்(Anna Jarvis) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது 20ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட நவீன அன்னையர் தினம் கிறிஸ்தவ கலாச்சாரத்தை அடிப்படியாககொண்டது ஆனாலும் 16ம் நூற்றாண்டுகளில் கொண்டாடப்பட்ட ஞாயிறு அன்னை (Mothering Sunday) தினமே இன்று ஐக்கிய இராச்சியத்தில் கொண்டாடப்படும் அன்னையர் தினமாகும் ஐக்கிய அமெரிக்காவில் அன்னையர்தினம் ஒவ்வொரு வருடமும் மே மாதம் வருகின்ற இரண்டாவது ஞாயிற்றுக்கிழமைகளில் கொண்டாடப்படுகின்றது இது ஐக்கிய இராச்சியத்தில் கொண்டாடப்படும் ஞாயிறு அன்னையர் தினத்திற்கு ஒப்பானது அமெரிக்காவில் கொண்டாடப்படும் இந்த அன்னையர் தினத்தினை அடிப்படையாக கொண்டுதான் பலநாடுகள் தங்கள் அன்னையர் தினத்தை கொண்டாடுகின்றன (இந்த நாடுகள் எப்பதான் தங்கள் சுயபுத்தியில் இயங்கப்போகின்றார்களோ தெரியாது இவற்றில் பல தென்னாசிய நாடுகளாகும்) அன்ன ஜர்விசினால் 1912ல் உருவாக்கப்பட்ட அன்னையர் தினம் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் வூட்ரோ வில்சன் அவர்களால் Mother's day என பிரகடனப்படுத்தப்பட்டு சட்டரீதியாகவும் அங்கீகரிக்கப்பட்டது. வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு தினங்களில் அன்னையர் தினத்தினை கொண்டாடினாலும் அன்னையை மரியாதை செய்து வாழ்த்தி வணங்குவது சந்தோசமாக வரவேற்கத்தக்க விடயம்தான்.

நன்றி: தேவிவாசம்

அப்பு திட்டினால் கருணாநிதியார் சாவரோ?

நேற்று எண்ட முதல் பிரச்சினைக்கு நீங்கள் குடுத்த ஆதரவில இன்னும் ஒரு கொஞ்சக்காலத்துக்கு இயமன எண்ட பக்கத்துக்கு அனுப்ப வேண்டாம் எண்டு இரவிரவா அம்மாளாச்சீட்டை ஒரே நேத்திதான் அத்துதான் பாருங்கோ தொடந்தும் எண்ட ஆதங்கங்களை உங்களிட்டை சொல்லுறதெண்டு முடிவெடுத்துப்போட்டன் அதவிட கொஞ்சம் கூடவும் ஆசைப்பட்டுட்டன் அதுதான் நீங்கள் குத்தின ஓட்டுகளை பாத்திட்டு நடக்கபோற எலக்சனில சுயேட்சையா நின்டிருக்கலாமோ எண்டு யோசிக்கிறன் எதுக்கும் உங்களிண்ட தொடந்து வாற அன்பையும் ஆதரவையும் பாத்திட்டு அடுத்த லெக்சனில பாப்பம் எண்டு முடிவெடுத்திருக்கிரன். இந்த கிழவண்ட ஆசையில மண்ணை அள்ளி போட்டுடாதேங்கோ.

ஏன் உவன் ஆனந்தசங்கரி உந்த வயசிலையும் லெக்சன் கேக்கிறான்தானே நான் ஏன் கேக்க கூடாது எண்டு ஆசைப்படுறதில தப்பில்லைதானே? என்னடா அந்தாளை போய் அவன் உவன் எண்டு இந்த கிழவன் கதைக்கிறன் எண்டு நீங்கள் ஆரும் தப்பா நினைக்ககூடாது நானும் அவனும் சின்ன வயசில இருந்து சிநேகிதம் ஒரே தட்டில சாப்பிட்டனங்கள் ஆனா ஆள் இப்ப மாறிட்டான் ஆனாலும் அந்த காலத்தில இருந்து அவன்ட அரளைபெந்த குணம் மட்டும் மாறேல என்னடாப்பா இது சொல்ல வந்ததை மறந்து நான் வேற எதோ கதைக்கிறன் அதால விசயத்துக்கு வர முதல்ல ஒண்டு சொல்லுறன் அவனும் நானும் சின்னனில செய்த கூத்துகள பிறகு ஒருக்கா கட்டாயமா சொல்லுறன். சரி இப்ப விசயம் இதுதான் காகம் திட்டி மாடு சாகுமோ?

என்னடா இந்த கிழவனுக்கு திரும்பவும் அறளை பேந்து போட்டுதோ எண்டு ஒருத்தரும் நினைக்ககூடாது. நேற்று எண்ட பிரச்சினைக்கு நீங்கள் குத்தின ஓட்டுகளை நினைச்சு நினைச்சு அம்மாளாச்சியை கும்புட்டுகொண்டு படுத்ததில நித்திர வந்ததே தெரியேல்ல ஒரு கொஞ்ச நேரம் கழிச்சு எண்ட நாதாரி பேரன் ஐயோ அம்மா எண்டு குளறின சத்தத்தை கேட்டு திடுக்கிட்டு எழும்பி பாத்தா அந்த கட்டேல போனவன் தொடந்தும் ஐயோ அம்மா ஐயோ நோகுது எண்டு கத்திகொண்டிருந்தான் என்னடா இது கோதாரி விழ எண்டு திட்டிக்கொண்டு தட்டுதடுமாறி எழும்பி போய் பாத்தால் உவன் காலை பிடிச்சுக்கொண்டு கத்திகொண்டிருந்தான்.

 அவனுக்கு பக்கத்தில எண்ட மோனும் நாசமாபோன மருமோளும் நிண்டுகொண்டு அவனையும் பாக்க வலு பெலத்தா கத்திக்கொண்டு நிண்டுதுகள் நானா ஏனடா எண்டு கொஞ்சம் மூக்கை நுழைச்சு பாக்க அவன்ட காலில இருந்து ரத்தம் வந்துகொண்டிருந்துது பக்கத்தில வட்டம் வட்டமா கொஞ்சம் இரும்புகள் கிடந்துது என்னதான் இருந்தாலும் அந்த நாசமாபோனவன் எண்ட பேரன்தானே எனக்கு உடன இரக்கம் வந்திட்டுது நான் உடன போய் ஒரு பழைய துண்டை எடுத்துகொண்டு வந்து அவன்ட ரத்தத்தை துடைக்க போகேக்க உந்த சனியன் புடிச்ச மருமோள் எண்ட கையை உடனதட்டிப்போட்டு உரு ஆட வெளிக்கிட்டுது அந்த மூதேவி என்னை பாத்து பேசின பேச்சை கேட்டு சத்தியமா வெட்கத்தை விட்டுட்டு சொல்லுறன் எனக்கு மூத்திரம் கொஞ்சம் போட்டுது.

அவள் பேசின பேச்சை வெளியை சொன்னால் எங்கட குடும்ப மானம் போயிடும் அதால அத விட்டுட்டு அந்த சனியண்ட கருத்தை சொல்லுறன் கேளுங்கோ நல்லா கேட்டுட்டு உங்கட தீர்ப்பை சொல்லுங்கோ அந்த துலைவாள் சொல்லுறாள் நான் நேற்று திட்டின திட்டிலதான் உந்த பரதேசிண்ட காலில இரும்பு விழுந்ததாம் உங்களுக்கே நல்லா தெரியும் நீங்கள் எல்லாம் நேற்று நான் சொன்னதை கேட்டனீங்கள் தானே நான் எண்ட பிரச்சினையை தானே உங்களுக்கு சொன்னனான் அதில என்னதப்பு? நான் திட்டினபடியாலோ உவந்த காலில இரும்பு விழுந்தது? காகம் திட்டி மாடு சாகுமோ? அப்பிடியெண்டால் நான் திட்டினால் கருணாநிதியார் சாவரோ? நீங்களே சொல்லுங்கோ...

அசினின் கனவிலே வந்த 81 வயது கிழவன்

உந்த பாழ் பட்டுப்போன சினிமா காரியால இண்டைக்கும் ஒரு வேலையை மறந்துட்டன் பாருங்கோ. எப்பிடியாவது இந்த பாழா போன கரச்சல எல்லாருக்கும் சொல்லோணும் எண்டு இண்டைக்கு நான் ஒரு முடிவு எடுத்துபோட்டன். சும்மா இருக்கேக்க புல்லட்டின் வலையை மேயுரதால இதையும் வலையில சொல்லி போடா வேணும் எண்டு நினைச்சு  என்ட பேரனிட்டை ஒரு வலைப்பக்கம் செஞ்சு தரசொல்லி அழுது குளறி சாப்பிடாம இருந்து ஒரு மாதிரி இதை சரிக்கட்டி போட்டன். எண்ட பேரன் சின்ன பொடியன் எண்டாலும் ஆள் ஒரு நப்பி நமசிவாயம் பாருங்கோ அவனும் அவன்ட அம்மாவும் சேர்ந்து (அதுதான் எண்ட மருமோள் ) இந்த கிழவனை சாப்பிடாம இருக்கிறதுதான் நல்லதுண்டு சொல்லி சாகப்பன்னுரதுக்கு முடிவேடுத்துப்போட்டுதுகள்.

எண்ட மோன் வேலையால வந்ததும் அவன்ட காலில ஓடிப்போய் விழுந்து ஐயோ இதுகள் இன்னை சாகொல்ல பாக்குதுகள் எண்டு கத்தி அவனிட்டை என்ர கோரிக்கையை முன்வச்சுட்டன் பிறகு அவன் சொல்லித்தான் எண்ட பேரன் இதை செஞ்சு தந்தவன் சும்மா சொல்லகூடாது என்ட மோன் எனக்கு முன்னால நல்லா நடிப்பான் அதுதான் பாருங்கோ எண்ட மோன் அவன்ட மனிசிக்கு சரியா பயந்தவன் அவள் பாவி ஒருக்கா முறைச்சு பாத்தாலண்டால் உவனுக்கு நிண்ட நிலையில மூத்திரம் போயிடும் அந்தளவுக்கு பயம். எண்ட மோனுக்கே மதிப்பு குடுக்காத உந்த துலைவாள் எப்பிடி இந்த கிழவனுக்கு சாப்பாடு குடுப்பாள் எண்டு ஒருக்கா யோசிச்சு பாருங்கோ சத்தியம்மா சொல்லுறன் எண்ட கதையை கேட்டால் நீங்கள் அழுது போடுவிங்கள் அதால அத நிப்பாட்டி போட்டு விசயத்துக்கு வாறன்.


எண்ட பேரன் பெரிய சத்தாமாத்தான் சினிமா பாட்டுகளை போட்டுட்டு இருந்து பாத்துகொண்டிருப்பன் எனக்கும் பொழுது போகாததால நானும் இடைக்கிட கள்ளமா எட்டி பாப்பன். ஐயோ உந்த கட்டையில போனவளுகள் எல்லாத்தையும் கழட்டிபோட்டு ஆம்பிளைகளோட நிண்டு துள்ளி துள்ளி கட்டிபுடிச்சு ஆடுதுகள் எண்ட பேரனும் உதைதான் பூந்து பூந்து பாக்கிறான் உவண்ட வயசுக்கு உந்த துலைவான் பாக்கிறத பாத்திட்டு கட்டேல போக எண்டு திட்டிக்கொண்டு நான் போய் எண்ட பாட்டுக்கு குப்பற படுத்துட்டன்.

கொஞ்ச நேரத்தால உந்த கட்டைல போனவன் அம்மா ஓடிவா அம்மா ஓடிவா எண்டு காட்டு கத்து கத்தினான் நானும் பயந்துபோய் தட்டு தடுமாறி வந்து பாத்தா எண்ட மருமோளும் உந்த கட்டேல போனவனும் சேந்து சிரிச்சு சிரிச்சு பாழாப்போன பாட்டை பாக்குதுகள் எனக்கு வந்த கோவத்துக்கு சுடலைக்கு போக எண்டு திட்டிக்கொண்டு திரும்பவும் படுக்க போட்டன் ஆனால் உவளவையிண்டை சத்தம் நிண்டபாடில்லை அதால என்ட நித்திரையும் குழம்பி போச்சுது சரி உதுகள் என்ன கதைக்குதுகள் எண்டுகொண்டு கொஞ்சம் காதை திருப்பினால் எதோ அசினோ பிசினோ எண்டோ கதைக்குதுகள் பிறகு அவளின்டை கண்ணை பாருங்கோ காலை பாருங்கோ எண்டு ஒரே வர்ணிப்புதான் உந்த துலைவாண்ட வயதுக்கு உவன் தண்ட தாயோட கதைக்கிற கதையை பாரன் எண்டு நினைச்சு கொண்டு கண்ணை மூடினால் நித்திரை வரமாட்டன் எண்டுட்டுது.

 
 சரி என்ன உந்த பிசினை பற்றி தான் உவன் தொடந்து கதைக்கிறான் எண்டுட்டு அதை கொஞ்சம் ஒளிச்சு நிண்டு பாப்பம் எண்டு  போய் பாத்தால்.... சும்மா சொல்லகூடாது உவன் சொன்னாதை விடவும் அவள் வடிவாத்தான் இருந்தாள் உண்ட வயசுக்கு உதெல்லாம் தேவையோ எண்டு உள்மனது கேட்டாலும் கொஞ்சநேரம் நிண்டு ரசிச்சு பாத்துகொண்டு நிக்க பாட்டுகள் முடிஞ்சு போய் உதுகள் படுக்க வெளிக்கிட்டுதுகள். எனக்கெண்டால் விட்டுட்டு போக மனமில்லை என்ன செய்ய ச்சீ சனியனுகளுக்கு இடி வந்து விழ எண்டு திட்டி கொண்டு போய் படுத்தால் உடன தித்திரை வந்திட்டுது.
 
திடீரெண்டு விடிய சாமமிருக்கும்.......... உந்த அசினோ பிசின் வந்து என்னை சொர்க்கத்துக்கு கூட்டிக்கொண்டு போட்டாள் அங்கை போய் எல்லாத்தையம் கழட்டி போட்டு அரை குறையோட என்னை கட்டி புடிச்சி ஒரு ஆட்டம் ஆடினாள் பாருங்கோ அது...அது...எண்ட வாழ்க்கேல நான் கண்டதில்லை கொஞ்ச நேரத்தில அவள் போயிட்டாள் எண்டு திடுக்கிட்டு எழும்பின பிறகுதான் தெரிச்சுது அது கனவெண்டு அட சனியன் எண்டு கனவை செல்லமா திட்டிக்கொண்டு படுத்தால் கொஞ்ச நேரத்தில விடிஞ்சுபோச்சு.
 
யோசிச்சு பாத்தன் அந்த நாளுகள்ள பக்கத்து வீட்டு கனகமும் மூண்டாம் வீட்டில இருந்த அன்னமும் கனவில வந்த பிறகு இப்ப இந்த கிழட்டு வயசில உவள் பிசின் தான் வந்திருக்கிறாள் சரிசரி தேத்தண்ணியை குடிப்பம் எண்டு தோஞ்சிட்டு வருவம் எண்டு போய் பிசினை நினைச்சுகொண்டே எல்லாத்தையும் முடிச்சுட்டு துவாயால துடைக்கேக்க தான் பாத்தன் நான் குளிச்சிருக்கிரனே தவிர தோயவில்லைஎண்டு ச்சீ இண்டைக்கும் மறந்து போச்சு எண்டு எனை நானே திட்டிக்கொண்டு வந்து தேத்தண்ணி குடிக்கேக்கிள்ள தான் யோசிச்சனான் உத எப்பிடி என்டாலும் எல்லாருக்கும் சொல்லிப்போட வேணும் எண்டு.
 
அதனால தான் உந்த உண்ணா விரதம் நடிப்பெல்லாம். சரி தலைப்பை (நீங்கள் வேற ஏதாச்சும் நினைச்சால் நான் பொறுப்பில்லை) 81 வயசு கிழவனின் கனவில வந்த அசின் எண்டு வைப்பம் எண்டு தான் நினைச்சனான் ஆனால் அதுகூட உந்த பிசினை நினச்ச உடன மறந்து போய் மாறி வந்திட்டுது . என்ன தான் இருந்தாலும் மறதி எண்டுறது எல்லாருக்கும் இருக்கிறதுதானே...... அதுசரி உந்த கிழட்டு வயசில மறதி ஒண்டும் பெரிசில்லை தானே எண்டு ஒருத்தரும் சொல்லகூடாது.....