அப்பு திட்டினால் கருணாநிதியார் சாவரோ?

நேற்று எண்ட முதல் பிரச்சினைக்கு நீங்கள் குடுத்த ஆதரவில இன்னும் ஒரு கொஞ்சக்காலத்துக்கு இயமன எண்ட பக்கத்துக்கு அனுப்ப வேண்டாம் எண்டு இரவிரவா அம்மாளாச்சீட்டை ஒரே நேத்திதான் அத்துதான் பாருங்கோ தொடந்தும் எண்ட ஆதங்கங்களை உங்களிட்டை சொல்லுறதெண்டு முடிவெடுத்துப்போட்டன் அதவிட கொஞ்சம் கூடவும் ஆசைப்பட்டுட்டன் அதுதான் நீங்கள் குத்தின ஓட்டுகளை பாத்திட்டு நடக்கபோற எலக்சனில சுயேட்சையா நின்டிருக்கலாமோ எண்டு யோசிக்கிறன் எதுக்கும் உங்களிண்ட தொடந்து வாற அன்பையும் ஆதரவையும் பாத்திட்டு அடுத்த லெக்சனில பாப்பம் எண்டு முடிவெடுத்திருக்கிரன். இந்த கிழவண்ட ஆசையில மண்ணை அள்ளி போட்டுடாதேங்கோ.

ஏன் உவன் ஆனந்தசங்கரி உந்த வயசிலையும் லெக்சன் கேக்கிறான்தானே நான் ஏன் கேக்க கூடாது எண்டு ஆசைப்படுறதில தப்பில்லைதானே? என்னடா அந்தாளை போய் அவன் உவன் எண்டு இந்த கிழவன் கதைக்கிறன் எண்டு நீங்கள் ஆரும் தப்பா நினைக்ககூடாது நானும் அவனும் சின்ன வயசில இருந்து சிநேகிதம் ஒரே தட்டில சாப்பிட்டனங்கள் ஆனா ஆள் இப்ப மாறிட்டான் ஆனாலும் அந்த காலத்தில இருந்து அவன்ட அரளைபெந்த குணம் மட்டும் மாறேல என்னடாப்பா இது சொல்ல வந்ததை மறந்து நான் வேற எதோ கதைக்கிறன் அதால விசயத்துக்கு வர முதல்ல ஒண்டு சொல்லுறன் அவனும் நானும் சின்னனில செய்த கூத்துகள பிறகு ஒருக்கா கட்டாயமா சொல்லுறன். சரி இப்ப விசயம் இதுதான் காகம் திட்டி மாடு சாகுமோ?

என்னடா இந்த கிழவனுக்கு திரும்பவும் அறளை பேந்து போட்டுதோ எண்டு ஒருத்தரும் நினைக்ககூடாது. நேற்று எண்ட பிரச்சினைக்கு நீங்கள் குத்தின ஓட்டுகளை நினைச்சு நினைச்சு அம்மாளாச்சியை கும்புட்டுகொண்டு படுத்ததில நித்திர வந்ததே தெரியேல்ல ஒரு கொஞ்ச நேரம் கழிச்சு எண்ட நாதாரி பேரன் ஐயோ அம்மா எண்டு குளறின சத்தத்தை கேட்டு திடுக்கிட்டு எழும்பி பாத்தா அந்த கட்டேல போனவன் தொடந்தும் ஐயோ அம்மா ஐயோ நோகுது எண்டு கத்திகொண்டிருந்தான் என்னடா இது கோதாரி விழ எண்டு திட்டிக்கொண்டு தட்டுதடுமாறி எழும்பி போய் பாத்தால் உவன் காலை பிடிச்சுக்கொண்டு கத்திகொண்டிருந்தான்.

 அவனுக்கு பக்கத்தில எண்ட மோனும் நாசமாபோன மருமோளும் நிண்டுகொண்டு அவனையும் பாக்க வலு பெலத்தா கத்திக்கொண்டு நிண்டுதுகள் நானா ஏனடா எண்டு கொஞ்சம் மூக்கை நுழைச்சு பாக்க அவன்ட காலில இருந்து ரத்தம் வந்துகொண்டிருந்துது பக்கத்தில வட்டம் வட்டமா கொஞ்சம் இரும்புகள் கிடந்துது என்னதான் இருந்தாலும் அந்த நாசமாபோனவன் எண்ட பேரன்தானே எனக்கு உடன இரக்கம் வந்திட்டுது நான் உடன போய் ஒரு பழைய துண்டை எடுத்துகொண்டு வந்து அவன்ட ரத்தத்தை துடைக்க போகேக்க உந்த சனியன் புடிச்ச மருமோள் எண்ட கையை உடனதட்டிப்போட்டு உரு ஆட வெளிக்கிட்டுது அந்த மூதேவி என்னை பாத்து பேசின பேச்சை கேட்டு சத்தியமா வெட்கத்தை விட்டுட்டு சொல்லுறன் எனக்கு மூத்திரம் கொஞ்சம் போட்டுது.

அவள் பேசின பேச்சை வெளியை சொன்னால் எங்கட குடும்ப மானம் போயிடும் அதால அத விட்டுட்டு அந்த சனியண்ட கருத்தை சொல்லுறன் கேளுங்கோ நல்லா கேட்டுட்டு உங்கட தீர்ப்பை சொல்லுங்கோ அந்த துலைவாள் சொல்லுறாள் நான் நேற்று திட்டின திட்டிலதான் உந்த பரதேசிண்ட காலில இரும்பு விழுந்ததாம் உங்களுக்கே நல்லா தெரியும் நீங்கள் எல்லாம் நேற்று நான் சொன்னதை கேட்டனீங்கள் தானே நான் எண்ட பிரச்சினையை தானே உங்களுக்கு சொன்னனான் அதில என்னதப்பு? நான் திட்டினபடியாலோ உவந்த காலில இரும்பு விழுந்தது? காகம் திட்டி மாடு சாகுமோ? அப்பிடியெண்டால் நான் திட்டினால் கருணாநிதியார் சாவரோ? நீங்களே சொல்லுங்கோ...

No response to “அப்பு திட்டினால் கருணாநிதியார் சாவரோ?”

Post a Comment